எங்களுக்குக் கூட ரசிகர் மன்றம் இருக்கான்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்கன்னு சந்தோஷ் கிட்ட கேட்டிருந்தோம்.
வெறும் ரசிகர் மன்றம் மட்டுமின்றி நற்பணி மன்றமாகவும் துவக்கியிருக்கும் தெக்கிக்காட்டான் அவர்களே உங்களுடைய அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும் நாங்கள் மிகுந்த கடன் பட்டவர்களாகி இருக்கிறோம். மிக்க நன்றி.
தெக்கிக் காட்டான் அவர்கள் துவக்கியுள்ள இந்த ரசிகர் நற்பணி மன்றம் இனி ஆவியுலக தலைமை ரசிகர் மன்றமாக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மன்றம் துவக்குவதற்கு அனுமதி, அங்கீகாரம் போன்ற விவகாரங்களை இனி பின்வரும் முகவரியில் இயங்கும் மன்றத்தில் இருந்து தெக்கிக்காட்டான் அவர்கள் கவனிப்பார் என்றும் அறிவிக்கப்படுகிறது.
அமானுஷ்ய ஆவி ரசிகன் நற்பணி மன்றம்,
நாலாவது மடக்குப்பனியார தெரு,
வாஷிங்டன் டி.சி.