செருப்பை மாட்டுவது எப்படி?

Thursday, June 07, 2007


1. செருப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
2.ஒரு ஜோடி செருப்புகள் உள்ளனவா என்று சரிபார்த்துக் கொள்ளவும்.
3. வலது கால் செருப்பை வலது காலிற்கு நேராக வைக்கவும்.
4.இடது கால் செருப்பை இடது காலிற்கு நேராக வைக்கவும்.
5.இடது, வலது கால் செருப்புகளை முறையே சரியாக வைத்திருக்கிறோமா என்று சரி பார்க்கவும்.
6. இடது காலை மெதுவே உயர்த்தி வலது காலால் நின்றவாறே இடது கால் செருப்பின் மீது இடது காலை வைக்கவும்.
7.இடது காலைத்தான் இடது கால் செருப்பின் மீது வைத்திருக்கிறோமா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
8.இப்பொழுது இடது காலை இடது கால் செருப்பினுள் மெதுவாக நுழைக்கவும்.
9. வலது காலை மெதுவே உயர்த்தி இடது காலால் நின்றவாறே வலது கால் செருப்பின் மீது வலது காலை வைக்கவும்.
10.வலது காலைத்தான் வலது கால் செருப்பின் மீது வைத்திருக்கிறோமா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
11.இப்பொழுது வலது காலை வலது கால் செருப்பினுள் மெதுவாக நுழைக்கவும்.
அவ்வளவுதான் செருப்பு போட்டாயிற்று.
எச்சரிக்கை :
மண்டபத்தில் செருப்பிற்கு உரியவர் வந்து காலும் செருப்புமாக பிடிக்கும் முன்னர் மண்டபத்தை விட்டு ஜூட் விட்டு விடவும்.