உலகக் கோப்பை கிரிக்கெட்- கணிப்புகள்

Tuesday, March 13, 2007



உலகக் கோப்பை 2007 - கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் நாடுகளுக்கிடையேயான வெற்றி தோல்விகள் பற்றிய ஆவியுகல கணிப்புகள்.

1. உலகக் கோப்பை 2007 யை வெல்ல பிரகாசனமான வாய்ப்புகள் உள்ள அணிகள் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான்.

2. இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்குச் செல்வதே சந்தேகம்.

3. இந்திய அணியைப் பொறுத்தவரை அரையிறுதிச் சுற்றுவரை அழைத்துச் செல்லும் வீரர்களாக பொறுப்புடன் விளையாட இருப்பவர்கள்.
கங்குலி, சேவாக், ஹர்பஜன் சிங்.

சச்சின் ஓரிரு அரை சதம்/சதங்களைப் பூர்த்தி செய்தாலும் எல்லா ஆட்டங்களிலும் அவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்பது சந்தேகமே!

4. குறைந்த பட்சம் ஒரு போட்டியாவது குறைந்த பட்சம் 5 முதல் 10 ஓவர்கள் மழையால் பாதிக்கப் படும்.

5. இந்திய அணி முக்கியமான விளையாட்டு ஒன்றை டக்ளஸ்வெர்த் முறையின் மூலம் இழக்க நேரிடும். அதுவே அடுத்த சுற்றிற்கு செல்வதில் இருந்து முற்றுப் புள்ளி வைக்கக் கூடும்.

(முழுக்க முழுக்கக் கற்பனையே...! டென்ஷன் ஆனவர்கள் உடனடியாக தங்களது இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ளவும்)