உலகக் கோப்பை 2007 - கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் நாடுகளுக்கிடையேயான வெற்றி தோல்விகள் பற்றிய ஆவியுகல கணிப்புகள்.
1. உலகக் கோப்பை 2007 யை வெல்ல பிரகாசனமான வாய்ப்புகள் உள்ள அணிகள் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான்.
2. இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்குச் செல்வதே சந்தேகம்.
3. இந்திய அணியைப் பொறுத்தவரை அரையிறுதிச் சுற்றுவரை அழைத்துச் செல்லும் வீரர்களாக பொறுப்புடன் விளையாட இருப்பவர்கள்.
கங்குலி, சேவாக், ஹர்பஜன் சிங்.
சச்சின் ஓரிரு அரை சதம்/சதங்களைப் பூர்த்தி செய்தாலும் எல்லா ஆட்டங்களிலும் அவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்பது சந்தேகமே!
4. குறைந்த பட்சம் ஒரு போட்டியாவது குறைந்த பட்சம் 5 முதல் 10 ஓவர்கள் மழையால் பாதிக்கப் படும்.
5. இந்திய அணி முக்கியமான விளையாட்டு ஒன்றை டக்ளஸ்வெர்த் முறையின் மூலம் இழக்க நேரிடும். அதுவே அடுத்த சுற்றிற்கு செல்வதில் இருந்து முற்றுப் புள்ளி வைக்கக் கூடும்.
(முழுக்க முழுக்கக் கற்பனையே...! டென்ஷன் ஆனவர்கள் உடனடியாக தங்களது இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ளவும்)
உலகக் கோப்பை கிரிக்கெட்- கணிப்புகள்
Tuesday, March 13, 2007
Posted by ஆவி அம்மணி at 2:47 PM
Labels: உலகக் கோப்பை, கணிப்புகள், கிரிக்கெட்
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
//முழுக்க முழுக்கக் கற்பனையே...! டென்ஷன் ஆனவர்கள் உடனடியாக தங்களது இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ளவும்//
நற நறனு பல்லை கடிக்க வச்சிட்டு கடைசில இப்படி டிஸ்கி போட்டா விட்டுடுவோமா??
//1. உலகக் கோப்பை 2007 யை வெல்ல பிரகாசனமான வாய்ப்புகள் உள்ள அணிகள் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான்.//
இன்னைக்கு பாகிஸ்தானுக்குப் பிரகாசமான ஆரம்பம்தான் போங்க!
//3. இந்திய அணியைப் பொறுத்தவரை அரையிறுதிச் சுற்றுவரை அழைத்துச் செல்லும் வீரர்களாக பொறுப்புடன் விளையாட இருப்பவர்கள்.
கங்குலி, சேவாக், ஹர்பஜன் சிங்.//
சேவாக்?!!! நீங்க சொன்னா சரிதான்!
//நற நறனு பல்லை கடிக்க வச்சிட்டு கடைசில இப்படி டிஸ்கி போட்டா விட்டுடுவோமா?? //
ஹி.ஹி...!
மணிகண்டன், விட வேண்டாம். உங்க கருத்துக்களையும் அப்படியே அள்ளி விடுங்க!
புகுந்து விளையாடுவோம்!
//இன்னைக்கு பாகிஸ்தானுக்குப் பிரகாசமான ஆரம்பம்தான் போங்க!
//
ஒரு மேட்சை வெச்சி எப்படிங்க முடிவு பண்ண முடியும்?
வெ.இ கூடத்தான் இந்தியாகிட்டே 85 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனாங்க!
முதல் மேட்ச் பாக்கிஸ்தானை வின் பண்ணலையா?
//சேவாக்?!!! நீங்க சொன்னா சரிதான்! //
கொத்தனாரே!
கங்குலியை எந்தக் கேள்வியும் கேக்காம ஒத்துகிட்டீங்க!
சேவாகை ஒத்துக்க மாட்டீங்களா?
//சேவாகை ஒத்துக்க மாட்டீங்களா?
//
சேவாக்குக்கு அடுத்த வாரம் ரிடர்ன் டிக்கெட் கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க அம்மணி :)
கங்குலியை யாராவது தேவையில்லாம வம்புக்கிழுத்தீங்க.. அப்புறம் அவ்ளோதான்... சொல்லிப்புட்டேன்.
கோப்பைக்குள் ரத்தம் ஊத்தி குடித்த பழக்கம் உண்டா ?
செந்தழல் ஆவி...சே..ரவி
// பொறுப்புடன் விளையாட இருப்பவர்கள்.
கங்குலி, சேவாக், ஹர்பஜன் சிங். //
இந்த லிஸ்டில் சேவாக்கை சேர்த்ததை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன்.. அருமையான நகைச்சுவை உணர்வு உங்களுக்கு :-)
//உலகக் கோப்பை 2007 யை வெல்ல பிரகாசனமான வாய்ப்புகள் உள்ள அணிகள் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான்.//
இங்க இருக்கிற (ஆ)சாமிகள்தான் இப்படீன்னா ஆவிகூட அப்படித்தான் இருக்கு.
பாகிஸ்தான் அவுட்டே.....
The selection team could have made Ganguly as captain of the team. Ganguly is talented and had been luckier too to take the team to Finals of most of the tournaments. But, Finals-lathan Khotai Vittuduvaru.
நீங்க சொன்ன மாதிரியே
நடக்குதுங்க
என்ன ஒரு ESP பவர் உங்களுக்கு
chanceஏ இல்ல
(ம் பாவம் பாகிஷ்தான் நீங்க சொன்னத நம்பி ireland கூட விளையாண்டு superaa தோத்து ஒரு வழியா ஊருக்கு கிளம்பிட்டாங்க பா
வாழ்க)
;)
//சேவாக்?!!! நீங்க சொன்னா சரிதான்!//
இலவசக் கொத்தனாரே!
பெர்முடாவுடனான போட்டியில் சேவாக் 114.
இப்ப என்ன சொல்றீங்க?
//சேவாக்குக்கு அடுத்த வாரம் ரிடர்ன் டிக்கெட் கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க அம்மணி :)
//
மணிகண்டன்!
சேவாக்குக்கா ரிடர்ன் டிக்கெட் வேணும்?
//கங்குலியை யாராவது தேவையில்லாம வம்புக்கிழுத்தீங்க.. அப்புறம் அவ்ளோதான்... சொல்லிப்புட்டேன்//
லொடுக்கு அண்ணாத்தே!
இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுக்க கங்குலியின் ஆட்டம் கன்ஸிஸ்டன்ஸியா இருக்கும்!
//கோப்பைக்குள் ரத்தம் ஊத்தி குடித்த பழக்கம் உண்டா ?
செந்தழல் ஆவி...சே..ரவி //
செந்தழல் ஆவியா! அட! நம்ம ஆளு!
நாங்க கோப்பைக்குள் ஊத்தி குடிக்க மாட்டோம்!
கழுத்தைக் கடிச்சி அப்படியே சூடா சாப்பிடுவோம்!
//இந்த லிஸ்டில் சேவாக்கை சேர்த்ததை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன்.. அருமையான நகைச்சுவை உணர்வு உங்களுக்கு :-)
//
அப்பாவி!
உண்மையிலேயே சேவாக் ஒரு அப்பாவிங்க! நல்லா விளையாடுவாரு! ஏதோ ஒரு முறை தெரியாம சில தவறுகள் நடந்து போச்சு!
அவருதான் திருந்திட்டேன்னு சொல்றாருல்ல!
//The selection team could have made Ganguly as captain of the team. Ganguly is talented and had been luckier too to take the team to Finals of most of the tournaments. But, Finals-lathan Khotai Vittuduvaru//
அனானி ஆவி,
கரெக்டா சொன்னீங்க! நன்றி!
//என்ன ஒரு ESP பவர் உங்களுக்கு//
பிரியா மேடம்!
ஹி.ஹி.
அதான் முழுக்க முழுக்க கற்பனைன்னு சொல்லிட்டமே!
Post a Comment