மறு பி(இ)றப்பு!

Thursday, October 12, 2006

எங்கள் ஊரைச் சேர்ந்த அம்மணியின் ஆர்வக்கோளாறின் காரணமாக பிளாக்கர் பீட்டாவிற்கு அப்டேட் செய்யப்போய் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட கதையாயிற்று. எங்களுடைய பழைய வலைப்பூவான இந்த ஆவிகள் உலகத்தில் போட்ட புதிய பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்கும்போது பிழைச் செய்திகள் வந்தபடியால் மீண்டும் பழையபடி பிளாக்கரிலேயே வேறு வலைப்பூ தொடங்கி விட்டோம்.

இம்முறை பொறுப்பு என் கையில் வழங்கப்பட்டுள்ளது. இனி ஆவி அம்மணி இல்லை. ஆவி அண்ணாச்சி என்று அறியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொல்கிறேன்.

இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த பழைய வலைப்பூ அழிக்கப்பட்டுவிடும். நான் அமானுஷ்ய ஆவியின் போலி அல்ல என்று நிரூபிக்க இதன்மூலம் துண்டைப் போட்டு தாண்டுகிறேன்.

(ஐடியா உபயம்: ஒரு அனானி அண்ணாச்சி)

இப்படிக்கு ஆவி அண்ணாச்சி.

யாராச்சும் உதவுங்களேன் பிளீஸ்....!

Monday, October 09, 2006

என்னுடைய பழைய பிளாக்கர் அக்கவுண்டைய பிளாக்கர் பீட்டாவுக்கு மாற்றியதால் வந்த வினை. இந்த வலைப்பூவின் முந்ததய பதிவான
ஒரு கவிதை - காதல் பிசாசு என்ற பதிவை தமிழ் மணத்திற்கு அறிவிக்க (அதாவது பதிவை புதுப்பிக்க) முயற்சிக்கும்போது ஒரு எர்ரர் வருகிறது.

இதற்கு என்ன காரணம், என்ன செய்ய வேண்டும் என்று யாராவது விஷய்ம் தெரிந்தவர்கள் உதவுவீர்களா?

ஒரு கவிதை - காதல் பிசாசு!

Friday, October 06, 2006


உயிழந்த பின்னும்
உறவுகளில் நாட்டம்!
இழந்தது உடலைத்தான்!
உணர்வுகளை அல்ல!

ஆசைகள் அழியாமல்தான்
ஆவிகளாய் அலைகிறோம்!
நிராசைகள் எங்களை
நிர்க்கதி ஆக்கிவிட முடியாது!

மீண்டும் மீண்டும்
வருவோம்!
மண்ணுலக ஆசைகள்
எங்களிடம்
நிரந்தரமாய்
இருக்கும் வரை!
அவை
இறக்கும் வரை!