பதிவுகளின் வாயிலாக!

Saturday, March 07, 2009




சமாதிகளில் நாங்கள்
சாவகாசமாக
ஓய்வெடுகிறோம்தான்!

ஆனாலும்
எங்களின் ஆயுளில்
நிறைவேறாத
அல்ப ஆசைகள்
எங்களுக்குள்
எகத்தாளமிட்டுக்
கொண்டுதானிருக்கின்றன!

என்ன செய்வது?
செத்த பின்னும்
சிவனே என்று
நிம்மதியாய்
இருக்க முடிவதில்லை
எங்களால்!

ஆசைகளை
அறவே ஒழிக்க
அனுபவித்துத் தீர்
என்பதுதான்
எங்களுக்குத்
தெரிந்த ஒரே வழி!

அதனால்தான்
அவ்வப்போது
எட்டிப் பார்க்கிறோம்!
எங்கள் பதிவுகளின்
வாயிலாக!



21 comments:

இராம்/Raam said...

அடடா கவுஜ கூட எழுதுறியே????

ஆவி அம்மணி said...

இராம் அண்ணே!

கவுஜ நமக்கு கை வந்த கலையாச்சே!

(கால் வந்த கலைன்னுதான் சொல்ல முடியாது எங்களுக்கு! ஏன்னா எங்களுக்குத்தான் கால் இருக்காதே)

மு.கார்த்திகேயன் said...

என் பதிவுக்கு வந்து சர்வேல கலந்துகிட்டு பின்னூட்டம் இட்டதற்கு நன்றிங்க ஆவி

மு.கார்த்திகேயன் said...

//கால் வந்த கலைன்னுதான் சொல்ல முடியாது எங்களுக்கு! ஏன்னா எங்களுக்குத்தான் கால் இருக்காதே///


அட அட அடடே!

கதிர் said...

ஆவி ஆத்தா உங்களுக்கு எக்ஸ்பயரி டேட் எதுவுமே கிடையாதா?

கொஞ்ச நாள்தான் பூமியில இருப்பிங்களாமே. நெசமா?

Anonymous said...

உங்களை பேய் / பிசாசு / காட்டேரி என்று தூற்றுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

மல்லிகைப்பூ எங்கே வாங்குறீங்க ? நல்லா வாசனையாருக்கே, அதான் கேட்டேன்..

கொலுசு வெள்ளியா தங்கமா ? உங்களுக்கு கால் இல்லைன்னா கொலுசை எங்கே மாட்டுறீங்க ?

சில கிளு கிளு சினிமா நடிகைகள் ஆவி வேடம் போட்டதை பற்றி என்ன நினைக்கிறீங்க ?

ஆவி அம்மணி said...

தம்ப்ப்ப்ரீ,

//ஆவி ஆத்தா உங்களுக்கு எக்ஸ்பயரி டேட் எதுவுமே கிடையாதா?
//

எக்ஸ்பயரி ஆகித்தான் ஆவியாவே ஆகுறோம்! அப்புறம் எங்களுக்கெப்படி எக்ஸ்பயரி?

ஒய்ப்பயரிதான் உண்டு!

ஆவி அம்மணி said...

//கொஞ்ச நாள்தான் பூமியில இருப்பிங்களாமே. நெசமா?
//

ஆமாம். ஆனால் அது எங்கள் விருப்பம்!

ஆவி அம்மணி said...

செந்தழல் ரவி,

//உங்களை பேய் / பிசாசு / காட்டேரி என்று தூற்றுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?//

அதெல்லாம் எங்களை தூற்றும் சொற்கள் அல்ல! அதையெல்லாம் சொன்னால் நாங்கள் பெருமைப் படுவோம்!

//மல்லிகைப்பூ எங்கே வாங்குறீங்க ? நல்லா வாசனையாருக்கே, அதான் கேட்டேன்..//

எங்களுக்கென்றே தோட்டங்கள் நிறைய உண்டு. அங்கே பறித்து கட்டுவோம். அந்த தோட்டமெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியாது!


//கொலுசு வெள்ளியா தங்கமா ? உங்களுக்கு கால் இல்லைன்னா கொலுசை எங்கே மாட்டுறீங்க ?//

கொலுசு தங்கத்திலும் உண்டு. வெள்ளியிலும் உண்டு.

சாங்க் ரெக்கார்டிங், அல்லது யாரையாவது பயமுறுத்தும் நாட்களில் மட்டும் நாங்கள் மனித உருவில் வருவோம். அப்போது கால்கள் இருக்கும்!

//சில கிளு கிளு சினிமா நடிகைகள் ஆவி வேடம் போட்டதை பற்றி என்ன நினைக்கிறீங்க ? //

அவர்களைக் கண்டு நாங்கள் பயப்படுவது உண்டு. அதனால் அவர்களுடன் நாங்கள் வம்பு வழக்கு வைத்துக் கொல்வதில்லை!

பொன்ஸ்~~Poorna said...

ரவி, சுடருக்குக் கேட்ட மாதிரி இருக்கு!

கவிதாக்காவிடம் சொல்லி பேட்டியே எடுக்கச் சொல்லிரலாம் போலிருக்கே..

ஆவி, உங்களுக்குக் கேப்பங்கஞ்சி பிடிக்குமா?

ஆவி அம்மணி said...

//பொன்ஸ் said...
கவிதாக்காவிடம் சொல்லி பேட்டியே எடுக்கச் சொல்லிரலாம் போலிருக்கே..
//

:))

//
ஆவி, உங்களுக்குக் கேப்பங்கஞ்சி பிடிக்குமா?
//

பிடிக்காது. ஆனால் அணில் ரத்தம் பிடிக்கும்!

david santos said...

Helo!
Very nice
Tank you

நாமக்கல் சிபி said...

:)

நசரேயன் said...

ஆவி கவிதை நல்லா இருக்கு,ஆமா உங்க ஆவியிலே இட்லி அவிக்கலாமா?

Udhayakumar said...

ஆத்தா, உன்னைய யாரு 3 வருஷம் கழிச்சு உசுப்பிவிட்டது... விட்டகுறை தொட்ட குறை இருந்தா சொல்லு. பட்டை சரக்கு பார்த்து நாளாச்சு, நானே உன்னை மலையேத்தி வைக்கிறேன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏ யாத்தே.. கவிதைல கூட ஒரு ஆவித்தனம் தானா?

ரவி said...

வாங்க ஆவி அம்மணி. ஏன் பதிவு பக்கம் வரமாட்டேங்குறீங்க...

ரீ எண்ட்ரி ஆனா பத்தாது, தொடர்ந்து மொக்கை போடனும்...

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anonymous said...

you're actually a excellent webmaster. The site loading speed is incredible. It sort of feels that you're doing any
distinctive trick. In addition, The contents are masterpiece.
you have performed a fantastic activity on this subject!
Feel free to surf my webpage :: erinmore mixture

Anonymous said...

Howdy I am so thrilled I found your blog, I really found you by error, while I
was looking on Bing for something else, Anyhow I am here now and
would just like to say thanks for a marvelous post and a all
round interesting blog (I also love the theme/design), I don't have time to go through it all at the minute but I have bookmarked it and also added your RSS feeds, so when I have time I will be back to read more, Please do keep up the awesome work.
Also visit my web-site : samson tobacco

Anonymous said...

Home mole removal can work well for those who have moles that bother them as long as the are not a typical moles.
Once your mole is dry, cut a piece of duct tape three times the size of the
mole. But since something was happening I decided to keep trying for
a few more nights.

my webpage - how to get rid of warts and verrucas