அவந்தியக்காவுக்காக இந்த அழகுப் பதிவு

Saturday, April 07, 2007

அழகுத் தொடர்ல அடுத்ததா யாரை அழைக்கலாம்னு நம்ம அவந்தியக்கா குழம்பிப் போய் இருக்காங்க! யாராச்சும் விசனப் பட்டா நம்ம மனசு தாங்காது.


பெண் என்றால் பேயும் இறங்கும் அல்லவா? அதான் அவங்க அழைக்கும் முன்பாகவே அவங்க அழைத்ததாக நினைத்துக் கொண்டு அந்த அழைப்பையும் ஏற்றுக் கொண்டு இந்த அழகுப் பதிவை இடுகிறேன்.





1. அழகுன்னாலே எங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது இயற்கைதான். அழகான ஓடையும் அதன் இரு கரைகளிலும் பூச்சொரியும் மரங்களும், மெதுவாய் சலசலத்து ஓடும் ஓடை நீரும், நினைச்சுப் பார்க்கும்போதே அழகா இருக்கும். அங்கே போய்ட்டா நேரம் காலமே தெரியாது. அப்படியே அங்கே இருக்குற மரங்களில் தொங்கிகிட்டே ஒரு தூக்கம் போட்டா...!




2. அடுத்ததா ஒற்றையா நிற்கும் மரங்கள் எல்லாமே எங்களுக்கு அழகுதான். ஒத்தையா நிக்குற மரம் அதுவும் புளிய மரம்னா சொல்லவே வேணாம். டகால்னு மேல ஏறி துண்டைப் போட்டு இடம் பிடிச்சிக்குவோம்.


3.மரங்கள் அடர்ந்த தோப்பு கொள்ளை அழகு. அதுவும் பெரிய காடா இருந்தா ரொம்ப வசதி. அப்பத்தான இராத்திரி நேரத்துல வெள்ளை சேலை கட்டிகிட்டு ஹாயா ஒரு பாட்டை ஹம்மிங்க் செஞ்சிகிட்டே அப்படியே காத்தாட வாக்கிங்க் போக முடியும். எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்காது.


4.பேய்களுக்கு மிகவும் பிடிச்ச இன்னொரு விஷயம் சூரிய அஸ்தமனம். அதாங்க சன் ஸெட்டு. எப்படா பகல் முடிஞ்சி ராப்பொழுது தொடங்கும்னு இருக்கும். சூரியன் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சி இருள் கவ்வும் நேரம் இருக்கு பாருங்க. பார்க்க பார்க்க அப்படியே மனசுக்குள்ளே பரவசம் பொங்கும்.


5.எங்கியாவது ஊருக்கு ஒதுக்குப் புறமா இந்த மாதிரி பாழடைஞ்ச பழைய வீடு, பங்களா இருந்தா எங்களுக்குக் கொண்டாட்டம்தான். அதைத்தான் நாங்க கனவு இல்லமா கனவு கண்டுகிட்டு இருப்போம். வாடகை இல்லை. பேங்க் லோன் பிரச்சினை இல்லை. பார்த்த மாத்திரத்துல பால் காய்ச்சாமலேயே குடி புகுந்துட வேண்டியதுதான். ரொம்ப வசதியா இருக்கும். இந்த மாதிரி வீடுகளில் நாங்க கார் பார்க்கிங் வசதியெல்லாம் இருக்கான்னு பார்ப்பதில்லை.
முதல்ல எல்லாம் நாவல்களில் நீலாங்கரை பங்களா பத்தி எழுதுவாங்க. இப்ப அங்கெல்லாம் நாங்க போகக் கூட முடியலை. ஜனத்தொகை ஜாஸ்தி ஆகி இப்ப அங்கயும் மக்கள் ஆக்கிரமிச்சிட்டாங்க. :(




அடுத்ததா வேற யாரை கூப்பிடலாம்.
நமக்குத்தான் இருக்கவே இருக்காரே நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்சவரு....
வேற யாரு,,?
அப்புறமா எங்க பிளாக்ல பிரச்சினை ஆனப்பெல்லாம் இலவச ஆலோசனைகள் தந்து பிளாக் நல்லா வர வெச்ச எங்க பொன்ஸ் அக்கா...
ஜொள்ளு விடாத பசங்களைக் கூட கெடுத்துக் குட்டிச் சுவராக்கி ஜொள்ளு விட வைக்குற எங்க பாசமிகு அண்ணன் ஜொள்ளுப் பாண்டி...

ஆகியோரை அழகு ன்னா என்னன்னு டெபனிஷன் குடுத்து பதிவு போடுமாறு பணிவன்போட கேட்டுக்குறேங்கோவ்.


எங்க ஊரு எழுத்தாளர்

தமிழ்ப் பதிவுலகத்துல எங்களைப் பத்தி எழுதுறவங்க ரொம்ப குறைவுன்னு கவலைப் பட்டுகிட்டு இருந்தோம். அந்தக் குறையைப் போக்கும் விதமாக இப்போ அண்ணன் வினையூக்கி அவர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு கதையா எழுதித் தள்ளுறார்.

அண்ணன் வினையூக்கி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொல்கிறோம்.
அவரது கதைகளுக்கான சுட்டிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.


மூன்று வரியில் ஒரு கதை

அரை நிமிடக் கதை

இன்னொரு அரை நிமிடக் கதை

விரைவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்து

அண்ணன் வினையூக்கி அவர்களுக்கு பதிவுலக பி.டி.சாமி என்ற பட்டத்தை வழங்கி கவுரவிக்க இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொல்கிறோம்.