அழகுத் தொடர்ல அடுத்ததா யாரை அழைக்கலாம்னு நம்ம அவந்தியக்கா குழம்பிப் போய் இருக்காங்க! யாராச்சும் விசனப் பட்டா நம்ம மனசு தாங்காது.
பெண் என்றால் பேயும் இறங்கும் அல்லவா? அதான் அவங்க அழைக்கும் முன்பாகவே அவங்க அழைத்ததாக நினைத்துக் கொண்டு அந்த அழைப்பையும் ஏற்றுக் கொண்டு இந்த அழகுப் பதிவை இடுகிறேன்.
1. அழகுன்னாலே எங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது இயற்கைதான். அழகான ஓடையும் அதன் இரு கரைகளிலும் பூச்சொரியும் மரங்களும், மெதுவாய் சலசலத்து ஓடும் ஓடை நீரும், நினைச்சுப் பார்க்கும்போதே அழகா இருக்கும். அங்கே போய்ட்டா நேரம் காலமே தெரியாது. அப்படியே அங்கே இருக்குற மரங்களில் தொங்கிகிட்டே ஒரு தூக்கம் போட்டா...!
2. அடுத்ததா ஒற்றையா நிற்கும் மரங்கள் எல்லாமே எங்களுக்கு அழகுதான். ஒத்தையா நிக்குற மரம் அதுவும் புளிய மரம்னா சொல்லவே வேணாம். டகால்னு மேல ஏறி துண்டைப் போட்டு இடம் பிடிச்சிக்குவோம்.
3.மரங்கள் அடர்ந்த தோப்பு கொள்ளை அழகு. அதுவும் பெரிய காடா இருந்தா ரொம்ப வசதி. அப்பத்தான இராத்திரி நேரத்துல வெள்ளை சேலை கட்டிகிட்டு ஹாயா ஒரு பாட்டை ஹம்மிங்க் செஞ்சிகிட்டே அப்படியே காத்தாட வாக்கிங்க் போக முடியும். எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்காது.
4.பேய்களுக்கு மிகவும் பிடிச்ச இன்னொரு விஷயம் சூரிய அஸ்தமனம். அதாங்க சன் ஸெட்டு. எப்படா பகல் முடிஞ்சி ராப்பொழுது தொடங்கும்னு இருக்கும். சூரியன் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சி இருள் கவ்வும் நேரம் இருக்கு பாருங்க. பார்க்க பார்க்க அப்படியே மனசுக்குள்ளே பரவசம் பொங்கும்.
5.எங்கியாவது ஊருக்கு ஒதுக்குப் புறமா இந்த மாதிரி பாழடைஞ்ச பழைய வீடு, பங்களா இருந்தா எங்களுக்குக் கொண்டாட்டம்தான். அதைத்தான் நாங்க கனவு இல்லமா கனவு கண்டுகிட்டு இருப்போம். வாடகை இல்லை. பேங்க் லோன் பிரச்சினை இல்லை. பார்த்த மாத்திரத்துல பால் காய்ச்சாமலேயே குடி புகுந்துட வேண்டியதுதான். ரொம்ப வசதியா இருக்கும். இந்த மாதிரி வீடுகளில் நாங்க கார் பார்க்கிங் வசதியெல்லாம் இருக்கான்னு பார்ப்பதில்லை.
அடுத்ததா வேற யாரை கூப்பிடலாம்.
ஆகியோரை அழகு ன்னா என்னன்னு டெபனிஷன் குடுத்து பதிவு போடுமாறு பணிவன்போட கேட்டுக்குறேங்கோவ்.
23 comments:
ஹையோ..ஹையோ...
என்ன சொல்றதுன்னே தெரியலை ஆவீஸ்...
ரொம்ப தேங்ஸ்...
உதவி பண்ணனும்னு சொன்ன உடனே போட்டுடீங்களே..
//பெண் என்றால் பேயும் இறங்கும் அல்லவா?//
ப்ரூவ் பண்ணிட்டீங்களே...நன்றி
இந்த உதவிய நான் 'ஆவி' ஆகரவரைக்கும் மறக்க மாட்டேன்...
நான் ஊருக்கு வந்து நெறைய ஒத்த மரம் பிடிச்சு தரேன்.
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...
ஆஹா இன்னிக்கு எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் இருக்காய்ங்க....
//சொல்லவே வேணாம். டகால்னு மேல ஏறி துண்டைப் போட்டு இடம் பிடிச்சிக்குவோம்.//
அங்க என்னவோ சீட்டு கிடைக்க ஆளா பறக்கற மாதிரி துண்டுல போடற. யாருமே இல்லாத இடத்துல எதுக்குயா அடிச்சி பிடிச்சி துண்டு போடணும்!
//அழகுன்னாலே எங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது இயற்கைதான்.//
பேய்கள்னு சொன்னவுடனே அழகு காணாம போயிடும்.
:)
ஒத்த மரத்தில் ஒருத்தர்தான் இருப்பீங்களா இல்லை கூட்டுக் குடும்பமும் நடத்துவீங்களா?
என்ன உட்டுட்டியே ஆவி. நானு ரொம்ப அழகா இருப்பேன்
ஆ.அ,
எங்கம்மா தாயி ஒன்னோட பழைய படம்??
அதிலே ரொம்பவே அழகா இருப்பியே நீயி ?
:)
ஆவி டிபன் சாப்பிட போய்ட்டியா?
அவந்தியக்கா!
//ஹையோ..ஹையோ...
என்ன சொல்றதுன்னே தெரியலை ஆவீஸ்
//
தேங்க்ஸ் எல்லாம் எதுக்குக்கா? எப்படியா இருந்தாலும் என்னைக் கூப்பிடுவீங்கன்னு தெரியும். அதான் நானே முந்திகிட்டேன்.
ஹிஹி..!
//இந்த உதவிய நான் 'ஆவி' ஆகரவரைக்கும் மறக்க மாட்டேன்...//
அப்போ ஆவி ஆனவுடன் மறந்துடுவீங்களா? இங்கதான வருவீங்க! அப்ப பேசிக்குறோம்!
//நான் ஊருக்கு வந்து நெறைய ஒத்த மரம் பிடிச்சு தரேன்.
//
ஐ! ஜாலி! அவந்தியக்கான்னா அவந்தியக்காதான்!
//ஆஹா இன்னிக்கு எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் இருக்காய்ங்க.... //
பங்காளி! இங்க எல்லாருக்கும் ஒரே மார்க்கம்தான்!
பல மார்க்கம் இருந்தாலே பிரச்சினைதானே!
:)
//யாருமே இல்லாத இடத்துல எதுக்குயா அடிச்சி பிடிச்சி துண்டு போடணும்!
//
தம்பியண்ணா! மனுஷங்கதான் இருக்க மாட்டாங்க! ஆவிங்கள்ளாம் நிறைய பேரு போட்டி போட்டுகிட்டு இடம் பிடிப்போம்!
மனுஷங்களா இருக்கும்போது வந்த பழக்கம்! போயிடுமா என்ன?
//பேய்கள்னு சொன்னவுடனே அழகு காணாம போயிடும்.
//
தம்பியண்ணா! அதெப்படி பேய்களுக்கு மட்டும் அழகில்லையா என்ன?
"அழகான ராட்சசியே!" ன்னு அர்ஜுன் முதல்வன்ல பாடுவாரே! அது எங்களைப் பத்திதான்!
:))
//ஒத்த மரத்தில் ஒருத்தர்தான் இருப்பீங்களா இல்லை கூட்டுக் குடும்பமும் நடத்துவீங்களா?
//
இலவசக் கொத்தனாரே! வெவகாரமா கேள்வி கேக்குறீங்க!
இங்க இருந்தே காதை கடிச்சிடுவோம்!
:))
//மந்தாரமோகினி said...
என்ன உட்டுட்டியே ஆவி. நானு ரொம்ப அழகா இருப்பேன்
//
யாரு கண்ணு நீயி! புதுசா இருக்கே!
போயி முதல்ல மோகினிகள் கழகத்துலே பேரை பதிவு செஞ்சிக்கோ!
மோகினின்னாலே அழகுதானே!
//அதிலே ரொம்பவே அழகா இருப்பியே நீயி ?//
இராம் அண்ணா! வந்துட்டீங்களா?
என்ன பண்ணுறது! பழைய படத்தைப் பார்த்தா பயமா இருக்குன்னு எல்லாரும் சொன்னாங்களே!
//ஆவி டிபன் சாப்பிட போய்ட்டியா? //
ஆமா! ஆவி பறக்க சூடா இட்லி சாப்பிட்டேன். இப்பத்தான எங்களுக்கு பிரேக் ஃபாஸ்டே!
//எங்கியாவது ஊருக்கு ஒதுக்குப் புறமா இந்த மாதிரி பாழடைஞ்ச பழைய வீடு, பங்களா இருந்தா எங்களுக்குக் கொண்டாட்டம்தான். அதைத்தான் நாங்க கனவு இல்லமா கனவு கண்டுகிட்டு இருப்போம். வாடகை இல்லை. பேங்க் லோன் பிரச்சினை இல்லை. பார்த்த மாத்திரத்துல பால் காய்ச்சாமலேயே குடி புகுந்துட வேண்டியதுதான். ரொம்ப வசதியா இருக்கும். இந்த மாதிரி வீடுகளில் நாங்க கார் பார்க்கிங் வசதியெல்லாம் இருக்கான்னு பார்ப்பதில்லை.
முதல்ல எல்லாம் நாவல்களில் நீலாங்கரை பங்களா பத்தி எழுதுவாங்க. இப்ப அங்கெல்லாம் நாங்க போகக் கூட முடியலை. ஜனத்தொகை ஜாஸ்தி ஆகி இப்ப அங்கயும் மக்கள் ஆக்கிரமிச்சிட்டாங்க. :(//
இது சூப்பர். இதுக்கெல்லாம் யாராவது பீல் பண்ணுவாங்களா? நீங்க போனா அவங்க வெளியே வந்துடுவாங்க.
மனிதனுக்கு அழகு எது?
பதிவுலகில் எல்லோரையும் இப்போது தொடர்
பதிவு பிடித்து ஆட்டுகின்றது
அழகு பற்றிய பதிவு ஒன்றை எழுதும்படி
ஆவி அம்மணி எனற பதிவர்
அழைப்பு அனுப்பியிருந்தார்
http://amanushyaaavi.blogspot.com/2007/04/blog-post_07.html
ஆவிகளில் (அதுவும் ஆவியான பிறகு) அயயன்,
அம்மணி என்ற பாகுபாடு ஏது?
அவர் ஏன் தன்னை இன்னும் அம்மணி
என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்?
பதில் சொல்லப் பணிக்கின்றேன்!
அருவமும், உருவமும் இல்லாத உலகம்
அல்ல்வா அது!
அங்கே போயும் தன்னுடைய அடையாளத்தை
அவ்ர் ஏன் விடவில்லை?
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!
http://devakottai.blogspot.com/2007/04/blog-post_08.html
என்ன நடக்குது இங்கே?
ஞாயிற்றுக்கிழமை ஆவிகளுக்கும் லீவா?
ஆவிஸ் உங்க அழகு கூட நல்லாதான் இருக்கு ;-))
//எங்கம்மா தாயி ஒன்னோட பழைய படம்??//
ரொம்ப அவசியம் வேணுமா ராயலு!
ஆம்மான்னா
கண்ணம்மா பேட்டையாண்ட 12 மணிக்கு வந்துடு.
சோலிய முடீச்சிடறேன்.
காலையில் வந்து கணினியை திறந்தால் ஆவி பேய்ன்னு ஒரே ஜிலுஜிலுன்னு இருக்கு..
எனக்கு சில டவுட்...ஆவிக்கு கால் இருக்குமா இருக்காதா ?
ஏன் ஆவி வெள்ளை ட்ரஸ்ஸை லைக் பண்ணி போடுது ?
மல்லிகைப்பூவுக்கும் மோகினிக்கும் அப்படி என்ன ரிலேஷன்ஷிப் ? (அப்போ அல்வாவும் பிடிக்குமா ?)
ஆவிக்கு கால் இல்லைன்னா, எப்படி கொலுசு போடுறது ?
Post a Comment