10.வலது காலைத்தான் வலது கால் செருப்பின் மீது வைத்திருக்கிறோமா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
11.இப்பொழுது வலது காலை வலது கால் செருப்பினுள் மெதுவாக நுழைக்கவும்.
அமானுஷ்யங்கள் நிறைந்தது. இறந்த பின் ஆத்மாவின் நிலை என்ன? முடிவில்லாக் கேள்வி.
Posted by ஆவி அம்மணி at 2:07 PM 8 comments
Labels: மொக்கை
அழகுத் தொடர்ல அடுத்ததா யாரை அழைக்கலாம்னு நம்ம அவந்தியக்கா குழம்பிப் போய் இருக்காங்க! யாராச்சும் விசனப் பட்டா நம்ம மனசு தாங்காது.
பெண் என்றால் பேயும் இறங்கும் அல்லவா? அதான் அவங்க அழைக்கும் முன்பாகவே அவங்க அழைத்ததாக நினைத்துக் கொண்டு அந்த அழைப்பையும் ஏற்றுக் கொண்டு இந்த அழகுப் பதிவை இடுகிறேன்.
1. அழகுன்னாலே எங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது இயற்கைதான். அழகான ஓடையும் அதன் இரு கரைகளிலும் பூச்சொரியும் மரங்களும், மெதுவாய் சலசலத்து ஓடும் ஓடை நீரும், நினைச்சுப் பார்க்கும்போதே அழகா இருக்கும். அங்கே போய்ட்டா நேரம் காலமே தெரியாது. அப்படியே அங்கே இருக்குற மரங்களில் தொங்கிகிட்டே ஒரு தூக்கம் போட்டா...!
2. அடுத்ததா ஒற்றையா நிற்கும் மரங்கள் எல்லாமே எங்களுக்கு அழகுதான். ஒத்தையா நிக்குற மரம் அதுவும் புளிய மரம்னா சொல்லவே வேணாம். டகால்னு மேல ஏறி துண்டைப் போட்டு இடம் பிடிச்சிக்குவோம்.
3.மரங்கள் அடர்ந்த தோப்பு கொள்ளை அழகு. அதுவும் பெரிய காடா இருந்தா ரொம்ப வசதி. அப்பத்தான இராத்திரி நேரத்துல வெள்ளை சேலை கட்டிகிட்டு ஹாயா ஒரு பாட்டை ஹம்மிங்க் செஞ்சிகிட்டே அப்படியே காத்தாட வாக்கிங்க் போக முடியும். எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்காது.
ஆகியோரை அழகு ன்னா என்னன்னு டெபனிஷன் குடுத்து பதிவு போடுமாறு பணிவன்போட கேட்டுக்குறேங்கோவ்.
Posted by ஆவி அம்மணி at 6:37 AM 23 comments
Labels: அழகு
தமிழ்ப் பதிவுலகத்துல எங்களைப் பத்தி எழுதுறவங்க ரொம்ப குறைவுன்னு கவலைப் பட்டுகிட்டு இருந்தோம். அந்தக் குறையைப் போக்கும் விதமாக இப்போ அண்ணன் வினையூக்கி அவர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு கதையா எழுதித் தள்ளுறார்.
அண்ணன் வினையூக்கி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொல்கிறோம்.
அவரது கதைகளுக்கான சுட்டிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
மூன்று வரியில் ஒரு கதை
அரை நிமிடக் கதை
இன்னொரு அரை நிமிடக் கதை
விரைவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்து
அண்ணன் வினையூக்கி அவர்களுக்கு பதிவுலக பி.டி.சாமி என்ற பட்டத்தை வழங்கி கவுரவிக்க இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொல்கிறோம்.
Posted by ஆவி அம்மணி at 4:22 AM 13 comments
Labels: கதைகள், வினையூக்கி
உலகக் கோப்பை 2007 - கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் நாடுகளுக்கிடையேயான வெற்றி தோல்விகள் பற்றிய ஆவியுகல கணிப்புகள்.
1. உலகக் கோப்பை 2007 யை வெல்ல பிரகாசனமான வாய்ப்புகள் உள்ள அணிகள் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான்.
2. இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்குச் செல்வதே சந்தேகம்.
3. இந்திய அணியைப் பொறுத்தவரை அரையிறுதிச் சுற்றுவரை அழைத்துச் செல்லும் வீரர்களாக பொறுப்புடன் விளையாட இருப்பவர்கள்.
கங்குலி, சேவாக், ஹர்பஜன் சிங்.
சச்சின் ஓரிரு அரை சதம்/சதங்களைப் பூர்த்தி செய்தாலும் எல்லா ஆட்டங்களிலும் அவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்பது சந்தேகமே!
4. குறைந்த பட்சம் ஒரு போட்டியாவது குறைந்த பட்சம் 5 முதல் 10 ஓவர்கள் மழையால் பாதிக்கப் படும்.
5. இந்திய அணி முக்கியமான விளையாட்டு ஒன்றை டக்ளஸ்வெர்த் முறையின் மூலம் இழக்க நேரிடும். அதுவே அடுத்த சுற்றிற்கு செல்வதில் இருந்து முற்றுப் புள்ளி வைக்கக் கூடும்.
(முழுக்க முழுக்கக் கற்பனையே...! டென்ஷன் ஆனவர்கள் உடனடியாக தங்களது இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ளவும்)
Posted by ஆவி அம்மணி at 2:47 PM 19 comments
Labels: உலகக் கோப்பை, கணிப்புகள், கிரிக்கெட்
யாரோ ஒரு பாவிப்பய கட்டி வெச்ச தாயத்துல ரெண்டு மாசமா வெளிய வரவே முடியாம போச்சு! இதனால் பயம் விட்டுப் போன பெனாத்தலார் அவர் கனவுல கூட எங்க ஊர்க்காரங்க வரலைன்னு தனியா பதிவு போட்டு சொல்றார்.
தமிழ் மணத்துல என்ன நடக்குது இப்போ? லொடுக்கு அண்ணாச்சி என்ன ஆனார்? இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஒரு நாள் தொடர்ல ஜெயிச்சதுல அண்ணன் காலரைத் தூக்கி விட்டுகிட்டு அலம்பல் பண்னிகிட்டி இருப்பாருன்னு நினனக்கிறேன்!
மக்களே வேற ஏதாவது விசேஷமான கொலை வெறித் தகவல்கள், சண்டை சச்சரவுகள் ஏதாவது நடந்ததா? போரடிக்காம போயிட்டிருக்கா?
அந்த தாயத்தைக் கட்டி எங்களுக்கே சூனியம் வெச்ச ஆளு மட்டும் கைல அகப்படட்டும். சூப்பு, பிரியாணி, 65ன்னு போட்டு கொண்டாடிப்புடுறோம்.
Posted by ஆவி அம்மணி at 8:19 AM 10 comments
Labels: வந்துட்டம்ல
Posted by ஆவி அம்மணி at 8:40 PM 3 comments
Labels: திரை விமர்சனம்
Diseño por Arcsin | A Blogger por Blog and Web