சில்லுன்னு ஒரு பேய்க்கதை

Friday, September 15, 2006

ராத்திரி பண்ணிரெண்டு மணி, அந்த அத்துவான ராத்திரில கும்மிருட்டு. சில்லுன்னு காத்து வேற!
அப்போ அந்த ரோட்டுல ஒரு ஆளு திக் திக்குன்னு அடிச்சிக்குற பயத்தோட தட்டுத் தடுமாறி வந்துகிட்டிருக்கான். அப்போ பார்த்து ஆண்டவனா அனுப்பி வெச்சா மாதிரி ஒரு பஸ். தூரத்துல வருது. இவன் வேகமா ஓடிப் போயி பஸ்ஸுக்குள்ள ஏறிக்கறான். பஸ்ஸுக்குள்ள பார்த்தா டிரரவர் மட்டும்தான். வேற யாரும் இல்லை. பஸ் மெதுவா நகருது. அப்படியே ஒரு சீட் பிடிச்சி உக்காந்துக்குறான் நம்ம ஆள்.

திடீர்னு "சப்"னு அவன் கன்னத்துல ஒரு அறை விழுது. விழுந்தடிச்சிகிட்டி சீட்டிலிருந்த எழுந்திருக்கறான்.

"ஏண்டா, நாங்களே பஸ் நகரலைன்னு தள்ளிகிட்டி வரோம், ஜம்முன்னு வந்து உக்காந்துகிட்டயா.. வந்து தள்ளுய்யா வண்டிய எங்களோட சேர்ந்துன்னு.." கண்டக்டர் திட்டிடுப் போறான்.

14 comments:

இராம்/Raam said...

இங்கே வந்துட்டியா நீயீ....

ஆவி அம்மணி said...

என்னை உன் கூட சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு என்னைத் தேடி நீயே வந்துட்டியே ராம் அண்ணா!

இராம்/Raam said...

அடபாவி அண்ணா சொல்லி பயமுருத்திறே..... சரிப்போ நான் வரலை.... ஓங்கூட கா.... :-)))

ஆவி அம்மணி said...

அண்ணா சொல்லாம என்னான்னு சொல்லுறது ராம் அண்ணா?

சரி! நாம ஃபிரண்ட்ஸா இருப்போம்.

அண்ணா இல்லை! என்னா?

கதிர் said...

ஜகன்மோகினி படத்தில அடுப்புக்குள்ள கால விட்டு சோறாக்குன ஆளு நீதானா?

இங்கனயும் வந்துட்டியா?

ஆவி அம்மணி said...

பார்த்தீங்களா! அண்ணா சொன்னவுடனே தம்பியும் வந்துட்டார்!

ஆவி அம்மணி said...

//ஜகன்மோகினி படத்தில அடுப்புக்குள்ள கால விட்டு சோறாக்குன ஆளு நீதானா?
//

சோறாக்கலை தம்பி!
பலவாரம் சுட்டேன்!

இராம்/Raam said...

//பார்த்தீங்களா! அண்ணா சொன்னவுடனே தம்பியும் வந்துட்டார்!//

ஏய் போலிஆவி உன்னோட சேட்டை அளவில்லாமே போகுது இன்னிக்கு....

சரி விளையாடு இன்னிக்கு மட்டும்தானே....

ஆவி அம்மணி said...

//ஏய் போலிஆவி உன்னோட சேட்டை அளவில்லாமே போகுது இன்னிக்கு....//

நாமதான் ஃபிரெண்டுன்னு சொல்லிட்டேனே ராம்!

இப்போ என்கூட பழம்தான!

இராம்/Raam said...

//நாமதான் ஃபிரெண்டுன்னு சொல்லிட்டேனே ராம்! //

ஓங்கூட பிரண்ட்சிப் வச்சுக்கிட்டா எங்க பேய்பிசாசு உலகத்திலே இருந்து பத்தி விட்டுருவாங்க ஆத்தா போலிஆவி...

//இப்போ என்கூட பழம்தான! //

இல்ல இன்னும் கா'தான்.... ஹீக்கும்..

கோவி.கண்ணன் [GK] said...

கதை சூப்பர் ...!

நன்மனம் said...

அருமையான சிறிய கதை!!!!

ஓகை said...

ஆவி, படிச்ச ஒடனே குபீர் சிரிப்பு வந்துட்டுது.
இந்த மாதிரி சரக்கெல்லாம் நெறைய அவுத்து வுடுங்க.

பா.சண்முகம் said...

எப்படிங்க இதுலாம் நீங்களே தனியா யோசிகிறதா ?இல்லை குருப்பா இருக்கீங்களா? ,காலங்காத்தாலே இவ்ளோ மொக்கை காட்டிடீங்கலே!!!