கால்ரா என்னும் பேய்........!

Sunday, September 17, 2006

அவனும், அவனது நண்பனும் சைக்கிளில் பக்கத்து ஊருக்கு அடுத்த ஊருக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். பக்கத்து ஊரை நெருங்கும் முன் அவர்களைப் பார்த்த ஒரு பெரியவர் சொன்னார்.
"அந்த ஊர்ப்பக்கமா போறீங்க? அங்கே ஒரே காலரா பீதியா இருக்கு, பார்த்துப் போங்க!"

நம்மாளுங்காளுக்கு அப்போ காலரான்னா என்னன்னு தெரியாது.
சைக்கிளை ஓட்டுறவன் கேட்டான்.

"ஏண்டா.. காலரான்னா என்னடா?"

"தெரியலையே..ஏதாவது பேயா இருக்குமோ! அதான் எல்லாரும் பயப்படறாங்க போல..!"

"சரி இப்போ என்னடா செய்யிறது?"

"வேகமா அந்த ஊரை கடந்து போயிடலாம், என்ன சத்தம் கேட்டாலும் திரும்பிப்பாக்காம போக வேண்டியதுதான்"

"சரி.அப்படியே செய்வோம்"

சைக்கிளை வேகவேகமாக மிதித்தான். இருவருக்கும் அந்த ஊரின் வழியே செல்லும்போது பயம் தொற்ரிக் கொண்டது.
பின்னால் உட்கார்ந்திருப்பவனின் கால் சைக்கிள் சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.அவன் கத்துகிரான்.

"டேய்..கால்ரா..கால்ரா....!"

"ஐய்யயோ..வந்துடுச்சா....!" என்று கத்தியவாறே இன்னும் வேக வேகமாக சைக்கிளை மிதிக்கிறான். சக்கரத்தில் கால் சிக்கிக் கொண்டதால் வேகமாக நகர மறுக்கிறது சைக்கிள்.

ஒட்டுபவன் சொல்கிறான்.

"டேய்..கிட்டே வந்துடுச்சு போல, சைக்கிளை பிடிச்சி இழுக்குது பாத்தியா...!"

பின்னவன் கத்திக் கொண்டே வருகிறான்.

"டேய் மடையா..கால்ரா...கால்ரா...!"

10 comments:

VSK said...

நீ மறைஞ்ச வருஷத்து ஜோக்கையெல்லாம் இப்ப எடுத்துப் போடறியெ, அ.ஆஅவி!

இப்ப எங்கே காலரா நோய் இருக்கு?
அதௌ ஒரு நோய்னு தெரியாத ஆளுங்க எங்கே இருக்காங்க?
கிராமத்துலியே அவனவன் ஸ்கூட்டி ரேஞ்சுக்குப் பறக்கறான்.
இப்போ போய் சைக்கிள் வேற!
ம்ஹூம்! ரசிக்க முடியலை!

ஆவி அம்மணி said...

ஐயா!

எனக்கு தெரின்ஞ்சதெல்லாம் என்னோட காலத்து ஜோக்குதான்.

இந்த காலத்துல ஏதோ ரீசண்டா சிக்கன் குனியா, தக்காளி குனியான்னெல்லாம் வந்திருக்காமே!

சிக்கன் குனியாவால எங்க ஊருக்கு வந்தவுக சில பேரு சொன்னாங்க!

VSK said...

//சிக்கன் குனியாவால எங்க ஊருக்கு வந்தவுக சில பேரு சொன்னாங்க!//

அல்பாயுசல செத்தவங்க தான் ஆவியா அலைவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.
இது மாதிரி நோய் வந்து செத்தவங்க கூட ஆவியா அலைவாங்களா, அ.ஆவி.
அது சரி, பாத்தவுக நீங்க!..... சொல்றீங்க!
நம்பித்தானே ஆவணும்!

அப்புறம் இன்னொண்ணு, அ.அவி!
இன்னிக்கு ஞாயித்துக் கிழமை.
அனேகமா, நம ரெண்டு பேருதான் இந்த வலைப்பூவுல இருப்போம்.

தனியா இருக்க உனக்கு பயமா இருக்குமேன்னுதான் கம்பெனி கொடுக்க வந்தேன்!

என்னதான் நீ ஆவின்னலும் எங்க ஊருக்கு புச்சுதானே! அதான்!
:))

கோவி.கண்ணன் [GK] said...

பேயும் பேயும் பழைய ஜோக்குதான
ஆக :))

நெல்லை சிவா said...

ஆவிகளே
ஆவிகளே
சொந்தக்கத
சொல்லுங்க..
பழைய
ஜோக்க
விட்டுட்டு
புது
ஜோக்
சொல்லுங்க...

இராம்/Raam said...

ஏய் போலி ஆவி,


சும்மா உன்னை மாதிரி செத்துப் போன கதைகள் சொல்லி அறுக்காதே.... :-(

மு.கார்த்திகேயன் said...

Hi, photos are uploaded correctly.. You can view it now.. Thanks for visiting my blog

ரவி said...

ஆவியுலக அனுபவங்கள் ஏதாவது சொல்ல முடியுமா ?

கொஞ்சம் ஜான்.எப்.கென்னடி ஆவியிடம் பேசி மர்லின் மன்றோவும் அவரும் காதலிச்சாங்களா அப்படீன்னு கேட்டு சொல்லுங்களேன்..

Syam said...

ஆவி போன ஜென்மத்து கதை எல்லாம் வேண்டாம்....புதுசா ஏதவது சொல்லுப்பா(மா) :-)

யோசிப்பவர் said...

இது ஏற்கெனவே ஒரு கவுணடமணி செந்தில காமெடியா கூட வந்துட்டுது!!