தலைமை ரசிகர் மன்றம் அறிவிப்பு

Saturday, September 16, 2006

எங்களுக்குக் கூட ரசிகர் மன்றம் இருக்கான்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்கன்னு சந்தோஷ் கிட்ட கேட்டிருந்தோம்.

வெறும் ரசிகர் மன்றம் மட்டுமின்றி நற்பணி மன்றமாகவும் துவக்கியிருக்கும் தெக்கிக்காட்டான் அவர்களே உங்களுடைய அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும் நாங்கள் மிகுந்த கடன் பட்டவர்களாகி இருக்கிறோம். மிக்க நன்றி.

தெக்கிக் காட்டான் அவர்கள் துவக்கியுள்ள இந்த ரசிகர் நற்பணி மன்றம் இனி ஆவியுலக தலைமை ரசிகர் மன்றமாக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மன்றம் துவக்குவதற்கு அனுமதி, அங்கீகாரம் போன்ற விவகாரங்களை இனி பின்வரும் முகவரியில் இயங்கும் மன்றத்தில் இருந்து தெக்கிக்காட்டான் அவர்கள் கவனிப்பார் என்றும் அறிவிக்கப்படுகிறது.

அமானுஷ்ய ஆவி ரசிகன் நற்பணி மன்றம்,
நாலாவது மடக்குப்பனியார தெரு,
வாஷிங்டன் டி.சி.

10 comments:

Santhosh said...

இதுல ஏகப்பட்ட உள்குத்து இருக்கும் போல இருக்கே. //எங்களுக்குக் கூட ரசிகர் மன்றம் இருக்கான்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்கன்னு சந்தோஷ் கிட்ட கேட்டிருந்தோம்.//
இது எப்போ நடந்தது. பாத்து சொல்றேன்பா. எனக்கு ஆவின்னா பயம் வீட்ல இட்லி சுடும் பொழுது கூட ஆவி இல்லாத இட்லியாத்தான் எனக்கு தருவாங்க கொஞ்சம் பாத்து பண்ணுங்க ஆவியாரே.

Syam said...

//நாலாவது மடக்குப்பனியார தெர//

அந்த தெருல சூடா ஆவி பறக்க பனியாரம் கிடைக்குமா :-)

Muse (# 01429798200730556938) said...

சங்கத்தை புதைகுழி வெட்டி திறந்து வைத்தவர் விக்கிரவாண்டி வி ரவிச்சந்திரந்தானே?

பொன்ஸ்~~Poorna said...

இதனால் சொல்லிக் கொள்வது யாதெனில், ஆவிக்கு ரசிகை மன்றம் ஒன்று ஆராதனா தலைமையில் நேற்று தொடங்கப்பட்டது.

அதன் நிரந்தர பொருளாளர், ஹி ஹி.. அம்மணி பொன்ஸ் தான் என்பதையும் அறிக :)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நீங்க பெண் பால் என்று எங்கோ படித்தேன். எனக்கு இந்த ஆவி விஷயத்தில ஆண் பால் பெண் பால் குழப்பம் எப்பவுமே உண்டு.

மோகினி கண்டிப்பா பெண் பால்தான் கொள்ளிவாய் பிசாசு பெண் பாலாத்தான் இருக்கணும் வாய் பத்தி சொல்லி இருக்காங்களே ஜடா முனி ஆண்பால்ன்னு நினைக்கிறேன்.

இன்னும் என்ன என்ன வெரைட்டி இருக்கீங்க எல்லாரும் என்ன என்ன பால் என்றெல்லாம் விவரமா எழுதுனா உங்களுக்கு ஒரு பதிவு கிடைக்குமில்ல.

அப்புறம் ஆவி ஆண் பாலா பெண் பாலா?

ஆவி அம்மணி said...

//அப்புறம் ஆவி ஆண் பாலா பெண் பாலா?//

உடல், உயிர் என்பவை எப்படி இருபாலருக்கும் பொருந்துபோ அப்படியே ஆவி என்பதும்.

ஆண் உடல், பெண் உடர்.
ஆண் உயிர், பெண் உயிர்.
ஆண் ஆவி, பெண் ஆவி.

Muse (# 01429798200730556938) said...

ஆண் பால், பெண் பால் எல்லாம் இருக்கட்டும். ஆவிகளில் திருநங்கைகள் உண்டா?

ஆவி அம்மணி said...

மியூஸ் அவர்களே!

மனிதர்கள் இறந்தபின்னர் உருவாதுதானே ஆவிகள்! அப்படி இருக்க ஆவிகளில் திருநங்கைகளும் உண்டா என்ற கேள்வி எதற்கு?

இங்கு மனித உலகில் உள்ளது போலவே
எங்கள் உலகிலும் உண்டு.

பொன்ஸ்~~Poorna said...

ஆவிம்மணி,
எங்க ஊட்டுக்கு ஆனையாவி அனுப்பும்போது மியூஸ் வூட்டுக்கும் ஒரு திருநங்கை ஆவியை நல்லா நாலு இட்லியோட அனுப்பி வையுங்க..
யெஸ்வந்த் நகர் தானே? ஆட்டோக்கு நான் காசு தரேன்! ;)

ஆவி அம்மணி said...

அனானிகளுக்கும் உரிய அங்கீகாரம் வழனங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தால்தான் இங்கு அனானிகளின் பின்னூட்டங்களும் அனுமதிக்கப்படுகின்றன.

அதைத் தவறான வழியில் ஆபாசப் பின்னூங்கள் இட பயன்படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.