எப்படி வந்தேன்?

Friday, September 15, 2006

1943 ம் வருடம் நான் ஒரு எட்டாம் வகுப்பு மாணவி. அப்போ எங்களுக்கு கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர்தான் சுப்பைய்யா வாத்தியார். அவரு சொல்லித்தந்த கணக்கு எங்களுக்கு மண்டையில ஏறவே ஏறாது.

ஆகஸ்டு 27 அன்னிக்கு அப்படித்தான் ஏதோ ஒரு கணக்கு ஃபார்முலாவை சொல்லச் சொல்லிக் கேட்டாரு. திடீர்னு கேட்டதால எனக்கு சொல்லத் தெரியலை. கிளாஸ்ல எல்லார்க்கும் முன்னாடி என்னைக் கண்டபடி திட்டிப்புட்டாரு. அனானி அண்ணாச்சிங்கள்ளாம் சொல்லுற மாதிரி
"நீ உருப்பட மாட்டே"ன்னு வேற சொல்லிட்டாரு. எனக்கு ரொம்ப அவமானமா போச்சி. அன்னிக்கே எங்க ஊருக்கு வெளிய இருந்த ஒற்றைப் புளியமரத்துகிட்ட மருந்து வாங்கி குடிச்சிட்டேன்.

அப்புறமா 63 வருஷம் கழிச்சி அமானுஷ்ய கதை எழுதரேன் பேர்வழின்னு நம்ம நாமக்கல் அண்ணாச்சிதான் என் சமாதியை தோண்டுனாரு. அப்புறம் சரியா சமாதியை மூடலல. அதை பயன்படுத்தி நான் வெளியே வந்துட்டேன்.
அவரு அந்த கதையை எழுதிட்டாரான்னு நான் கூட போயி அவரு பதிவு பக்கமா எட்டிப் பார்த்தேன். ஆனா அன்னிக்கு அவரு எழுதலை. அப்புறமா எழுதியிருப்பாரு போல. இப்ப என்னால அந்தப் பக்கம் போக முடியலை. ஏதோ தாயத்து எல்லாம் கட்டி வெச்சிருக்காரு.

6 comments:

SP.VR. SUBBIAH said...

இந்தப் பிறவியிலும் இந்தக் கணக்கு வாத்தியாரை மறக்காமல்
வந்து பார்த்தற்கு மிக்க மகிழ்ச்சி!
உங்கூடப் படிச்சவங்க வேற யாராவது ஆவியா அலஞ்சாங்கன்னா
நான் கேட்டதாகச் சொல்!
என்றும் அன்பு மறவாத
வாத்தியார்

ஆவி அம்மணி said...

//என்றும் அன்பு மறவாத
வாத்தியார்
//

உங்க அன்புக்கு இந்த ஆவி என்றும் கட்டுப்படும்.

aaradhana said...

உண்மையிலே உங்கள் பதிவுகளைப்பார்க்கும் போது ஆவி உலகத்திலிருந்து வந்திருப்பீர்களோ என்று தோன்றுகிறது..

ஆவி அம்மணி said...

//உண்மையிலே உங்கள் பதிவுகளைப்பார்க்கும் போது //

அப்ப பொய்யா வேற பதிவுகளைப் பார்ப்பார்களோ!

aaradhana said...

ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் கிண்டல் ஜாஸ்திதான்... போங்க..

Unknown said...

aavi....
you are so chweet.